வணிகர்கள் உரிமை மாநாடு: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாட்டில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று செவ்வாய்கிழமை (23-09-25) மாலை நடக்கிறது. மாநாட்டுக்கு புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். அங்காளன் எம்.எல்.ஏ., வில்லியம் ரீகன் ஜான்குமார், புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு, முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச்செயலாளர் முருகபாண்டியன், பொருளாளர் தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி வணிகர் உரிமை மாநாட்டு நோக்கங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவற்றுள் சில:
- வணிகர் நலவாரியத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
- புதுச்சேரியில் GST உச்சவரம்பை 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்த வேண்டும்.
- பண்ணாட்டு நிறுவனப்பிடியில் இருந்து வியாபாரத்தை மீட்க வேண்டும். உள்ளூர் வணிகத்தை காக்க வேண்டும்.
- GST வரியை குறைத்து சீரமைத்ததற்கு நன்றி கூறுதல்.
- நகராட்சியின் குப்பை வரியை அகற்றுதல்.
- வணிகர் உரிமத்தை எளிமைப்படுத்த வலியுறுத்தல்.
- வணிகர் உரிமத்துகான வரியை குறைக்க வலியுறுத்தல்.
- மின்சார வரியை குறைக்க வலியுறுத்தல்.
- வியாபாரிகளை அச்சுறுத்தும் ரவுடிகளை தடுக்க வலியுறுத்தல்.
- டாடா ஏசி வண்டியில் நடைபெறும் வியாபாரத்தை முறைப்படுத்த நடவடிக்கை.
- புதிய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள கடைகளை ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளிடமும், குபேர் பஜார் கடைகளை ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளிடமும் ஒப்படைக்க நடவடிக்கை.
- ஜிஎஸ்டி வரியில், 1% வரியை வணிக நலம் காக்க வழங்க வலியுறுத்தல்.
- புதுச்சேரியில் IT பார்க் திறந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்.
Post Views: 24