SSnews Digital- Tamil News | Online Tamil News | Tamil News Live | Pondicherry News | Breaking News Headlines, Latest Pondicherry News, India News, World News – SSsnews Digital
புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்த 2 குடும்பத்தினருக்கு, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர்.
இதில் நூற்றுக்கணக்கானோர் வாந்தி, பேதி ஏற்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கி இருந்தார். இந்நிலையில், உயிரிழந்த மேலும் இரண்டு குடும்பத்தினர்களுக்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.
உயிரிழப்பு குறித்து புதுச்சேரி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உதவித் தொகையை வழங்கி, ஆறுதல் தெரிவித்தது அக்குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.