காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங், “உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்” என புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்தார். இதனால் கூட்டம் தொடங்குவதற்கு முன் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

