செஸ் போட்டியை தொடங்கி வைத்த LJK தலைவர்

புதுவை:

புதுவை Hunters Queens Trophy முதல் இன்டர்நேஷனல் கிளாசிக் டூர்னமென்ட், புதுவை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது துணைவியார் குத்துவிளக்கு ஏற்றி, செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த சர்வதேச அளவிலான கிளாசிக் செஸ் போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டி தொடக்க விழாவில் விளையாட்டு ஆர்வலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கும், இளம் வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் இத்தகைய போட்டிகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு புதுவையில் விளையாட்டு துறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *