சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு

சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.12,820-க்கு விற்பனையாகிறது.

இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம், நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *