LJK தலைவருக்கு விளையாட்டு வீரர்கள் நன்றி
மகாராஷ்டிராவில் டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கயிறு தாண்டல் (Rope Skipping) சாம்பியன்ஷிப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தேவையான நிதி உதவியை வழங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை, வெற்றி பெற்ற வீரர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, தாங்கள் வென்ற பரிசுகள் மற்றும் பதக்கங்களை காண்பித்து, அவருக்கு நன்றியை தெரிவித்தனர்.
வீரர்களை சந்தித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், அவர்களை பாராட்டி, எதிர்கால போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.
இந்த சந்திப்பு நிகழ்வில், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

