கோ-கோ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுவை கோ-கோ அமெச்சூர் அசோசியேஷனைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வரும் 9ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற உள்ள சீனியர் தேசிய கோ-கோ போட்டியில் புதுவையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், போட்டிக்கு முன்னதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது அவர், தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடி, புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வீரர்களுக்கு உற்சாக வார்த்தைகளை தெரிவித்தார்.
வீரர்களின் இந்த சாதனை முயற்சிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தேசிய போட்டியில் புதுவை அணியின் பங்கேற்பு, விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

