புதுவை மூலக்குளம் பகுதியில் தனியார் கராத்தே பயிற்சி பள்ளி தொடக்கம்
புதுவை மூலக்குளம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கராத்தே பயிற்சி பள்ளி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில், நிகேஷ்சியில் JCM மக்கள் மன்ற தலைவர் ரிகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பள்ளியின் தொடக்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்காப்புக் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிகள், மாணவர்களின் உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என்பதால், இப்பயிற்சி பள்ளி உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி, புதுவை மூலக்குளம் பகுதியில் விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.

