வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, முதன்மை வைணவ திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது.
பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீ ரங்கநாத பெருமாளை, “கோவிந்தா… கோவிந்தா…” என்ற கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் திரண்டதால், சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த புனித நாளில் பெருமாளை பரமபத வாசல் வழியாக தரிசிப்பது மோட்சம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

