சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் கடும் சரிவு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.420 குறைந்து, இன்று ரூ.12,600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குறைவு, நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.23 குறைந்து, இன்று ரூ.258க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

