கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறப்பு – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைப்பு
கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மைதானத்தை திறந்து வைத்தார்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை புல்வெளி (Artificial Turf) உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானம் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இளம் வீரர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கு இது பெரும் ஊக்கமாக இருக்கும் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
மைதான திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

