சேதுசெல்வம் – LJK தலைவர் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைச் செயலாளரும், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமான சேது செல்வத்தை, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அவ்வை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
முன்னதாக சேதுசெல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, பட்டாசுகள் வெடித்து, மலர் தூவி உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சேதுசெல்வத்தின் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் நிர்வாகிகளுக்கு அவரது இல்லத்தில் அறுசுவை அசைவ விருந்து அளித்தார் சேது செல்வம்.
விரைவில் சேதுசெல்வம் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைய உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியை தொடர்ந்து பொங்கல் பண்டிகை ஒட்டி சேது செல்வம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரும்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு கரும்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

