ssnews

50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்றத்தில் இணைந்தனர்

புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், திருபுவனை தொகுதி JCM மக்கள் மன்ற வழக்கறிஞர் அணி தலைவர் ஆனந்தன் தலைமையில், திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முன்னிலையில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை JCM மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்வில் பல்வேறு சமூக, அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Read More

தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த மகன்!

புதுச்சேரி ஏனாம் பகுதியில் தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகளாக காத்திருந்து பழி தீர்த்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏனாம் பகுதியைச் சேர்ந்த திபிரி செட்டி நாராயணசாமி (35) என்பவர் நேற்று இரவு திரையரங்கம் அருகே மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், 2022ஆம் ஆண்டு நாராயணசாமி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்த மேக வெங்கடேசராவை பணம் திருப்பி…

Read More

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக  அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் பிரச்சாரப் பயணத்தை  தொடங்கினார். மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது . தொடக்கவிழாவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது தோட்டத் தொழிலாளி அசலா என்பவரின் வீடு யானையால் இடிக்கப்பட்டது. வீடு இடிக்கும் சத்தத்தை கேட்டு அசலா தனது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றார். அப்போது காட்டு யானை இருவரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில்…

Read More

முதலமைச்சர் ரங்கசாமி மத்திய சாலை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி, புதுச்சேரி-கடலூர் சாலை மற்றும் NH-32 பகுதியின் மேம்பாட்டிற்கு சுமார் 957 கோடி ரூபாய் நிதி உதவி கோரிக்கை வைக்கிறார். மரப்பாலம் முதல் முல்லோடை வரை தொடர்ச்சியான மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க உயர்மட்ட பாலம் கட்டல், திறனை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது முக்கிய குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

Read More

புதுச்சேரியில் ரூ.436 கோடி மேம்பால பணியை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436 கோடியில் 4 கி.மீ. புதிய மேம்பாலம் கட்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார். மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது. இந்த மேம்பாலம் 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.25 கோடியில் 14 கி.மீ….

Read More

BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளர்: இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரியின் வரலாற்று சாதனை!

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையான BSF (Border Security Force) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி, BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளராக (Pilot Engineer) பொறுப்பேற்றுள்ளார். இந்த சாதனை, பெண்களின் திறமையை வெளிப்படுத்தி, அமைப்பின் பன்முகப் பெண் சேர்க்கைக்கு மைல்கறையாக அமைந்துள்ளது. BSF இயக்குநர் தல்ஜித் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கு விமானத்தில் பறப்பதற்கான அதிகாரப்பூர்வ ‘பேட்ச்’ (Wings Patch) வழங்கப்பட்டது. இதேபோல், நான்கு…

Read More

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புதுச்சேரி நகரில் உள்ள நேரு வீதி மற்றும் காந்தி வீதி பகுதிகளில் நடைபெற்ற சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் திரளாகக் குவிந்தனர்.புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சண்டே மார்க்கெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை, மின்சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரின் முக்கிய சாலைகளான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் வியாபாரம் நடைபெற்றது….

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர்…

Read More

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர்  நடராஜன்

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள நாளந்தா இண்டர்நேஷனல் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் பிக்கிள் பால் மைதானத்தில் போட்டிகளை துவக்கினார். நடராஜன், மாணவர்களிடம் பேசிய பேச்சில், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, தேர்ந்தெடுக்கும் துறையில் மனமார்ந்த பற்று மிக முக்கியம் என தெரிவித்தார். “நான் இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகளை சந்தித்துவிட்டேன். இருப்பினும்,…

Read More

கல்லூரியில் பேராசிரியரை தாக்கிய 5 மாணவர்கள் கைது 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஐந்து மாணவர்கள், ஒரு பேராசிரியரை தாக்கியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். கல்லூரியில் கல்விச் சுற்றுலா நிகழ்வில், மாணவிகள் ஒருவர் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக கூறி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின் சேக் முகமது மைதீன், வசந்த் ஸ்ரீதரன், சுஜின், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் கல்லூரிக்குள் புகுந்து…

Read More

காரைக்கால் மீன்பிடி துறைமுகம் ரூ.136.17 கோடியில்  நவீன வசதிகளுடன் விரிவாக்கம்-நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

காரைக்கால் மீன்பிடி துறைமுகம் இன்று 136.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்க பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த துறைமுகம், காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு முக்கிய பயன்பாடாக உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து துறைமுகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர். விரிவாக்க பணியில், மீன் பதப்படுத்தும் நிலையம், படகுகள் மூலம்…

Read More

பிரபல ரவுடி கொலையில் கைது செய்யப்பட்ட முத்து மீண்டும் கைது – பயங்கர ஆயுதங்களுடன் சிக்கினார்!

பிரபல ரவுடி ஐயப்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ரவுடி முத்துவை, லாஸ்பேட்டை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வானரபேட்டை பகுதியை சேர்ந்த ஐயப்பன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருகே கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்து உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த முத்து, கருவடிக்குப்பம் பகுதியில் சொகுசு காரில் ஆயுதங்களுடன் சுற்றியபோது,…

Read More

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களை கோட்டிச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். காரைக்கால் கோட்டிச்சேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள் இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, அதே பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா,…

Read More

புதுச்சேரியில் கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளருக்கான எழுத்து தேர்வு

புதுச்சேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, திருவள்ளுவர் அரசு பெண்கள் கல்லூரி, அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு பள்ளி, பெத்தி செமினார், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற ஆய்வின் போது, தேர்வு மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், மின்சாரம்,…

Read More

புதுச்சேரி தவளக்குப்பத்தில் மீன் வண்டிகளால் கழிவு நீர் பரவி அவதி

தவளக்குப்பம் பகுதியிலிருந்து கடலூர், புதுச்சேரி, மடுகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் வழியாக பல மீன் ஏற்றுமதி வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைப்பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி, அறிவியல் கல்லூரி, கோயில் மற்றும் சிறு-குறு வியாபாரக் கடைகள் உள்ளதால், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் 20 முதல் 30 மீன் வாகனங்களில் இருந்து மீன் கழிவு நீர் சாலையில் கசியுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்குச்…

Read More

புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவை கண்டித்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதியத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், மேலும் குழுவின் வரம்பு குறிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு…

Read More

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…

சாதியை சட்டம் மூலம் ஒழிக்க முயற்சி வேண்டாம்; சமூகநீதி வழியே சமத்துவத்தை உருவாக்க நடவடிக்கை எடுங்கள். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சமூகநீதியை முன்னிறுத்தாமல் சாதி ஒழிப்பு ஏற்பட முடியாது என கோரிக்கை விடுத்துள்ளார். கொள்கை அறிவிப்புகளாக அல்லது தெரு பெயர்கள் மாற்றம் போன்ற நாடகமாதிரியாகக் காரியங்கள் நடத்துவதை அவர் கண்டித்தார்; சாதியை நீக்குவதற்கு உண்மையான தீர்வு சமத்துவம் உருவாக்கும் நீடிக்கமான செயல்திட்டங்கள் என்று தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்தும் விதத்தில் சாதிவாரி மக்கள் தொகை…

Read More

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 குழந்தைகளின் உயிரை பரித்துள்ளது  – சீமான் கண்டனம்

காஞ்சிபுரத்தில் இயங்கும் தனியார் மருந்து நிறுவனம் ஸ்ரீ சான் பார்மாவின் ‘Coldrif’ இருமல் மருந்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவை மீறி சேர்க்கப்பட்டதால் 20 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் பின்னர் நிறுவனர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த 14 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை, மொத்தம் 364 விதிமீறல்கள் இருந்தது என்பது…

Read More

சீனாவுக்கு மேலும் 100% வரி: அதிரடி அறிவிப்பு – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக வர்த்தகப்போரில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது அறிக்கையில், “சீனா உலக வர்த்தகத்தில் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே சீனாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். அதோடு முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,” என்று கூறியுள்ளார். ஏற்கனவே சீன பொருட்களுக்கு…

Read More

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. புதுச்சேரி  அரசில் பணிபுரியும் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் உத்தரவு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு கைக்கு கிடைக்கும் தொகை ரூ.6,908 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றியவர்கள் மட்டுமே…

Read More

புதுச்சேரியில் ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா தொடக்கம் – வானில் பறந்து புதுவையின் பசுமை அழகை ரசிக்கும் புதிய அனுபவம்

புதுச்சேரி சுற்றுலா துறை, உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவையின் இயற்கை அழகை வானில் இருந்து கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தில் புதுச்சேரியின் முக்கிய…

Read More

பாலியல் புகாரில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் – மாணவர்கள் மீது நடவடிக்கை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாருக்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, கைது செய்து வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார். “மாணவர்கள் தங்கள் உரிமைக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்துள்ளனர். அவர்களை தாக்கி, வழக்குப்பதிவு செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. மாணவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை…

Read More

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது-புதுவை பல்கலைக்கழகம் அறிக்கை.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியில் புறப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கி, 3.10 மணியளவில் கட்டிடத்தை அடைந்த மாணவர்கள் சிலர் கட்டிடத்தின் பக்கவாட்டு வாயில்களூடாக நுழைந்தனர். நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் மாணவர்களை அமைதியாக வெளியே அழைத்து, கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தை தொடருமாறு கேட்டனர். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல், உள்ளே போராட்டத்தை தொடர்ந்தனர். 100 மீட்டர் உள்ளகப் பிரதேசத்தில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடாதிருப்பது குறித்த உயர்நீதிமன்ற…

Read More

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் காவல்துறையினரை மிரட்டும் வீடியோ வைரல்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக, தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இது என் லிமிட்… நான்தான் எம்எல்ஏ… உங்களை தொலைத்து விடுவேன். போலீஸ் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்… குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை தருகிறீர்கள், மாணவர்களை மிதிக்கிறீர்கள்” என கடுமையாக எச்சரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்குமுன், காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில்…

Read More

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கைதை கண்டித்து லாஸ்பேட்டையில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை கண்டித்து, லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக சமூதாய கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் தங்களது கைகளில் பதாகைகள் ஏந்தி, “மாணவர் ஒற்றுமை வாழ்க”, “அரசியல் பழிவாங்கல் ஒழியட்டும்”, “மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களை ஆதரித்து பல சமூக அமைப்புகளும், மாணவர் இயக்கங்களும் கல்லூரி முன்பு ஒன்று கூடி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாணவர்கள்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி JCM மக்கள் மன்றம் போராட்டம்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக JCM மக்கள் மன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. காலாப்பட்டு காவல் நிலையம் முன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்கள் குறித்து விவாதம் நிலவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்…

Read More

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – 100க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

புதுச்சேரி : அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். “புற்றுநோயை விட நம்பிக்கை பெரியது, பெண்களின் வலிமை அதைவிட பெரியது, ஒவ்வொரு பெண்ணும் விழிப்புணர்வுடன் இருக்கட்டும், புற்றுநோய் இல்லா உலகம் நமது ஆகட்டும்” போன்ற வாசகங்கள் இடம் பெற்ற…

Read More

புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு – மகாராஷ்டிரா கொள்ளையன் உள்ளிட்ட 3 பேர் கைது!

புதுச்சேரி : புதுச்சேரி முழுவதும் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முதலியார்பேட்டை, ஜான்பால் நகர், மூலக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மூன்று பெண்களிடம் தங்கச் செயின்கள் பறிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், பி.ஒய்–01–சிடி–6689 என்ற எண்ணிலான பைக்கில் ஒரே நபர் மூன்றும் இடங்களிலும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய மாணவர்கள் மீது தடியடி! 24 மாணவர்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல்…

Read More

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் A.K.சாய் சரவணன் குமார் கருத்துக்கு எதிராக JAACT அமைப்பினர் மனு

புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறை குறித்து சட்டமன்ற உறுப்பினராக உள்ள A.K. சாய் சரவணன் குமார் தெரிவித்த கருத்துக்கு எதிராக, “காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (JAACT)” அமைப்பினர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். அமைப்பினர் தெரிவித்ததாவது: “7.10.2025 அன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசியபோது, காவல்துறை சில நேரங்களில் சட்டத்திற்குப்புறம்பாக ‘என்கவுண்டர் (extra judicial killing)’ செய்ய வேண்டி வரும் என சாய் சரவணன் குமார்கூறியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இத்தகைய கருத்துகள்…

Read More

காரைக்கால் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது!

காரைக்கால், அக்டோபர் 09 :காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் முருகானந்தம், செல்வகுமார், ராஜேஷ், ராஜேஷ், குணசேகர், ஞானவேல் மற்றும் 17 மீனவர்கள் கடந்த 7ஆம்‌ தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அதிகாலை விசைப்படகு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்தது. பழுது நீக்கும் பணியை மேற்கொண்டபோது இலங்கை கடற்படையினர் திடீரென வந்து 17 மீனவர்களையும் விசைப்படகையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் உடனடியாக மீட்டு…

Read More

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் (PWD) 2,642 பேர் தற்காலிக அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இவர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ரங்கசாமி, பணிநீக்கம் செய்யப்பட்ட 2,642 பேருக்கும் மீண்டும் பணி…

Read More

சிபிசிஐடி பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை — முக்கிய வழக்குகள் கிடப்பில்!

புதுச்சேரி காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் தற்போது போலி ஆவணங்கள், கள்ளநோட்டு, ஆயுத கடத்தல், போலி நிதி நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல முக்கிய வழக்குகள் தாமதமாகின்றன. தற்போது சிபிசிஐடி பிரிவில் சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 10 பேர் கொண்ட குழு…

Read More

தீபாவளிக்கு ரூ.570 மதிப்பிலான இலவச மளிகை தொகுப்பு வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி, அக்டோபர் 09:
நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர் கூறியது, “கடந்த கால ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. 10 ஆண்டுகள் மாநில வளர்ச்சி பின்னோக்கி சென்றது. உள்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி நிதி உதவி, வீடுகட்டும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படவில்லை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு சொன்னதையும், சொல்லாததையும் செய்யும் அரசாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

வரும் 10ஆம் தேதிக்கு மேல் இலவச அரிசி, கோதுமை மற்றும் விடுபட்ட இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசியையும் வழங்கப்படும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்ட ரூ.570 மதிப்பிலான மளிகை தொகுப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Read More