40 ஆண்டுகள் பின்னர் கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 1976 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த தேர் திருவிழாவை மீண்டும் நடத்தும் நோக்கில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயாரிக்கப்பட்டது. பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீ எல்லையம்மன் புதிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான மீனவ மக்கள் “ஓம்…

Read More

கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!

கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கூடலூரிலிருந்து தேவலா வழியாக அரசு பேருந்து கரியமலை பகுதியை நோக்கி சென்றபோது, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை, தனது குட்டியை பாதுகாக்கும் நோக்கில் பேருந்தை தாக்க முயன்றது. பயணிகள் ஹார்ன் ஒலியை கேட்டு ஓட்டுனர்…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது தோட்டத் தொழிலாளி அசலா என்பவரின் வீடு யானையால் இடிக்கப்பட்டது. வீடு இடிக்கும் சத்தத்தை கேட்டு அசலா தனது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றார். அப்போது காட்டு யானை இருவரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில்…

Read More