H-1B விசாவுக்கு தடை: டிரம்ப் அறிவிப்பு – இந்தியாவில் 32 ஆயிரம் பேரை பணியமர்த்திய அமெரிக்க நிறுவனங்கள்

H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, Meta, Apple, Google, Amazon, Microsoft, Netflix உள்ளிட்ட முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் மொத்தம் 32 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், 32 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்தே அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை…

Read More

புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் முயற்சி ? – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல் முயற்சியில் உக்ரைன் தரப்பில் இருந்து 91 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருந்ததாகவும், அவற்றை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படை முற்றிலும் அழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அரசு இந்த…

Read More

2036க்குள் நிலவில் அணுமின் நிலையம்: ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவிப்பு

2036ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் Nuclear Power அமைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ‘ரோஸ்கோஸ்மோஸ்’ (Roscosmos) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம், எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான நிலவு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நிலவில் நீண்டகால மனித வாழ்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த அணுமின் நிலையத்தின் மூலம்,…

Read More

உலக அழிவு தள்ளிவைப்பு: கானா நபரின் தீர்க்கதரிசனத்தில் திடீர் மாற்றம்

கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்பவர், தன்னைத் தானே தீர்க்கதரிசி என அறிவித்து, 2025 டிசம்பர் 25ஆம் தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் முழுவதும் அழிவைச் சந்திக்கப் போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அழிவில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக, கடவுளின் உத்தரவின் பேரில் பைபிளில் குறிப்பிடப்படுவது போல 8 பெரிய பேழைகளை (கப்பல்கள்) கட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எபோ நோவாவின் இந்த அறிவிப்பை நம்பிய பலர்,…

Read More

இந்தியாவின் கவலைக்கு தாய்லாந்து பதில்

கம்போடியா எல்லையில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம், தாய்லாந்து வீரர்களின் இழப்புகளோடு ஒப்பிடமுடியாது என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்திய நிலையில், அதற்கு பதிலளித்த தாய்லாந்து அரசு, இந்த நடவடிக்கை ஒரு அவமதிப்பாக கருதக் கூடாது என விளக்கம் அளித்துள்ளது. மேலும், கம்போடியா உடனான தங்களின் இருதரப்பு பிரச்சனையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய தலையீடு இதில் அவசியமில்லை என தாய்லாந்து…

Read More

அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி: மத்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன்: இந்திய அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘சாந்தி’ (Shanti) மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மசோதா, அணுசக்தி துறையில் புதிய முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும், அதன் மூலம் இந்தியா–அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும்…

Read More

Thailand-Cambodia | தாய்லாந்து – கம்போடியா போரால் இடம்பெயரும் மக்கள்!

தென்கிழக்கு ஆசியா: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ராணுவ மோதல்களால், இரு நாடுகளிலும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, தாய்லாந்தில் சுமார் 4 லட்சம் பேரும், கம்போடியாவில் சுமார் 5 லட்சம் பேரும் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கிடையேயான இந்த மோதல்களுக்கு மையக் காரணமாக, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பழங்கால இந்து கோயிலான ‘தா முயென் தாம்’…

Read More

8 போர்களை தானே தீர்த்ததாக மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் பல பகுதிகளில் நடந்த போர்களை தன்னால் தீர்க்க முடிந்ததாக மீண்டும் கூறியுள்ளார். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதன் மூலம் சுமார் ஒரு கோடி பேரின் உயிர்களை காப்பாற்றினேன் என அவர் தெரிவித்தார். மேலும், ரஷ்யா–உக்ரைன் இடையிலான போரை இதுவரை நிறுத்த முடியவில்லை என்றும், ஆனால் தொலைபேசி அழைப்பின் மூலம் தாய்லாந்து–கம்போடியா இடையிலான மோதலை நிறுத்தியதாகவும் டிரம்ப் கூறினார். இதனுடன், தன் முயற்சிகளால் இதுவரை மொத்தம் எட்டு போர்களை தீர்த்துள்ளேன்…

Read More

எலான் மஸ்க் புதிய உச்சம்: உலக பணக்காரர்களின் பட்டியலில் வரலாற்றுச் சாதனை

உலகின் முன்னணி தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தனது சொத்து மதிப்பை 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், உலக பணக்காரர்களின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சொத்து மதிப்பை எட்டிய முதலாவது நபராக அவர் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு, உலக பணக்காரர் பட்டியலில் 700 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தாண்டிய நபர் யாரும் இல்லாத நிலையில், மஸ்கின்…

Read More

இந்திய பங்குச்சந்தையில் ரஷ்யா முதலீடு: ரூ.5 லட்சம் கோடி வர வாய்ப்பு

புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக உறவில் முக்கிய திருப்பமாக, ரஷ்யா இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டம் உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் இந்திய வங்கிகளில் தேங்கி கிடக்கும் ரூபாய் தொகையை, இந்திய பங்குச்சந்தையில் முதலீடாக மாற்ற இரு நாடுகளும் இணைந்து நடைமுறை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யா இந்தியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கான பணம் டாலரில் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அந்த தொகை ‘வோஸ்ட்ரோ கணக்குகள்’ மூலம்…

Read More

வங்கதேசத்தில் அரசியல் பதற்றம்: மாணவர் இயக்கத் தலைவர் ஹாடி சுட்டுக் கொலை

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த போராட்டங்களை முன்னணியில் இருந்து வழிநடத்திய மாணவர் இயக்கத்தின் தலைவராக ஷெரீஃப் உஸ்மான் ஹாடி செயல்பட்டார். இந்த சூழ்நிலையில், வரவிருக்கும் வங்கதேச பொதுத் தேர்தலை முன்னிட்டு, தலைநகர் டாக்காவில் தனது தேர்தல் பிரசாரத்தை ஹாடி தொடங்கியிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது….

Read More

சிட்னி துப்பாக்கிச்சூடு: துணிச்சலுடன் தாக்குதலாளரை கட்டுப்படுத்திய அகமத்-அல்-அகமது, பிரதமர் பாராட்டு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், தாக்குதலாளரை துணிச்சலுடன் எதிர்த்து மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முயன்ற அகமத்-அல்-அகமதுவை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து பாராட்டினார். சம்பவத்தின்போது துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்திய நபர் மீது பாய்ந்து, அவரது துப்பாக்கியை பிடுங்க முயன்ற அகமத்-அல்-அகமது, அந்த முயற்சியில் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அகமத்-அல்-அகமதுவை சந்தித்த பிரதமர் அந்தோணி…

Read More

‘YOU BASTARDS’ – ஊடக பொறுப்பின் இரண்டு முகங்கள்

ஆஸ்திரேலியாவின் Daily Telegraph நாளிதழ், போண்டி கடற்கரை பகுதியில் நடந்த யூதர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலை முன்பக்கத்தில் ஒரே வரியில் சுட்டிக்காட்டியது – “YOU BASTARDS.” முதல் பார்வையில் இந்த தலைப்பு கடுமையானதாக தோன்றலாம். ஆனால் அதன் பின்னணி, ஒரு குறிப்பிட்ட ஊடகப் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. அந்த செய்தியில், குற்றவாளியின் பெயர், குடும்பப் பின்னணி, கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை போன்ற விவரங்கள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மாறாக, சம்பவத்தின் தீவிரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மட்டுமே செய்தியின்…

Read More

நாங்கள் தயாராக உள்ளோம் என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்…

இண்டிகோ விமான சேவைகள் முழுமையாக சீராகிவிட்டதாக நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தினசரி சேவைகளில் 10% குறைக்க உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படாததும், முன்பு 2,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது காரணமாக பயணிகள் பெரும் சிரமம் அனுபவித்தும் வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை வழங்குநரான இண்டிகோ தினமும் சுமார் 2,200 சேவைகளை இயக்கி வருகிறது. ஆனால் அரசின் புதிய உத்தரவால், தினசரி 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும்…

Read More

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு

மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.21 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 என அளவிடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் குறுகிய நேரம் மட்டுமே உணரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே சில பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் வீடுகளுக்குப் வந்தனர். எனினும், அதிர்வு மிகக் குறைவாக இருந்ததால் எந்தவித பெரும் அச்சமும் நிலவவில்லை. மியான்மர் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த அதிர்வால் கட்டிடங்கள், பொதுமருத்துவப்…

Read More

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அமெரிக்க 2025 டிசம்பர் 5 அன்று, Netflix மற்றும் Warner Bros. Discovery (WBD) ஆகிய நிறுவனங்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Warner Bros.-இன் திரைப்பட தொலைக்காட்சி ஸ்டுடியோக்களும், HBO Max / HBO ஓடிடி தளமும் புதிய ஒப்பந்தத்தின் கீழ் Netflix நிறுவனத்தின் சொந்தமாகும் என்று அறிவித்தன. அதன் படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ்…

Read More

ஆசியாவின் பல நாடுகளில் வெள்ளப் பேரிடர் தீவிரம்: 1,140 பேர் பலி இலங்கையில் அவசரநிலை

ஆசியாவின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பெரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் 1,140 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தெற்குப் பகுதியான தமிழகத்திலும் டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு நோக்கி நகர்வதால் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கமாக சென்னை – போர்ட் பிளேர் இடையே சில…

Read More

“நான் பெற்ற மகனே சேகர்!”- பேச்சில் பரபரப்பு

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் முன்னேறுவார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தொழில்துறையாளர், தன் குழந்தைகளில் ஒருவருக்கு இந்திய–அமெரிக்கர் சமூகத்தின் சாதனையாளரை நினைவுகூரும் வகையில் “சேகர்” என்ற பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். தன் மனைவி சிவான் ஜிலின்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக அவர் கூறினார். மேலும் நோபல் பரிசு பெற்ற இந்திய–அமெரிக்கர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக தனது மகனின்…

Read More

உலகின் முதல் உண்மையான நீல நிறப் பழம் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இயற்கையின் அரிய அதிசயம்.

உலகில் இயற்கையாகவே உண்மையான நீல நிறப் பழங்கள் இல்லை என்ற நம்பிக்கையை முறியடிக்கும் வகையில், ஆஸ்திரேலிய மழைக்காட்டில் இருந்து மிக அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. Elaeocarpus angustifolius எனப்படும் மரத்தில், உண்மையான நீலநிறத்தில் ஒளிரும் ஒரு அரிய பழம் காணப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘நீல குவாண்டாங்’ மரத்தின் அதிசயப் பழம் இந்த மரம் பொதுவாக Blue Quandong, நீல அத்திப்பழம், அல்லது Blue Marble Tree என்ற பெயர்களில் அறியப்படுகிறது. இதன் பழம் மிகவும் பிரகாசமான,…

Read More

பாகிஸ்தானின் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 9 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்குக் காரணம் டெகரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் காபூல் அரசு அடைக்கலம் வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த மாதமே பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிந்தியும் சூழல் சமாதானமாகவில்லை. இந்நிலையில், மோதலின் தீவிரம் மேலும் உயர்…

Read More

காசாவில் 25 மீ ஆழத்தில் 7 கி.மீ நீள மிகப்பெரிய சுரங்கம் – இஸ்ரேல் படை வெளியிட்ட வீடியோ வைரல்

காசா: ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கிய 2023 அக்டோபர் 7 முதல் போர்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் வீடுகளின் அடித்தளங்களில், நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களில் மறைந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் படை குற்றம் சாட்டி வருகிறது.இந்த சுரங்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக கண்டுபிடித்து அழிக்கும் பணியில் இஸ்ரேல் படை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு காசா எல்லைப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரியதாகிய புதிய ரகசிய சுரங்கம்…

Read More

ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப், அரசியலில் அதிர்ச்சி; எதிரி இன்று நண்பன்!

அமெரிக்க அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடுமையாக விமர்சித்த நியூயார்க் மேயர் ஜேஹ்ரான் மம்தானியை, தற்போது நேரடியாக பாராட்டி முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளிவந்தது. மோதலாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, ஆனால் விஷயம் மாறியது! மம்தானியை “கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்” என்று முன்பு ட்ரம்ப் பலமுறை தாக்கியிருந்தார். அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட்டாட்சி நிதியை நிறுத்துவேன்…

Read More

மாஸ்கோ ஏஐ கண்காட்சியில் மனித வடிவ ரோபோ நடனமாடி புதினை வரவேற்ற காட்சி வைரல்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கண்காட்சியில், அதிபர் விளாடிமிர் புதினை மனித வடிவ ரோபோ ஒன்று நடனமாடி வரவேற்ற காட்சி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்பெர்பேங்க், தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாஸ்கோவில் இந்த ஏஐ கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிபர் புதின் வருகை தந்தார். கண்காட்சிக்கு வந்த புதினை, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ‘கிரீன்’ என்ற மனித வடிவ ரோபோ…

Read More

உலகம் முழுவதும் X தடை

சமூக ஊடக தளம் X உலகளாவிய அளவில் பெரும் செயலிழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் சிக்கல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த தடங்கல் Android, iOS மொபைல் செயலிகளையும், வலைத்தளத்தையும் (x.com) ஒரே நேரத்தில் பாதித்து வருகிறது. மாலை 5.30 மணி நிலவரப்படி, தளத்தில் உள்நுழைய முடியாதது மற்றும் உள்ளடக்கங்களைப் பிரவுஸ் செய்ய முடியாதது உள்ளிட்ட காரணங்களுக்கு 11,300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த உலகளாவிய தடங்கல் பல்வேறு நாடுகளின் பயனர்களை தங்கள் கணக்குகளுக்கு அணுக…

Read More

சீனாவுக்கு மேலும் 100% வரி: அதிரடி அறிவிப்பு – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக வர்த்தகப்போரில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது அறிக்கையில், “சீனா உலக வர்த்தகத்தில் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே சீனாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். அதோடு முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,” என்று கூறியுள்ளார். ஏற்கனவே சீன பொருட்களுக்கு…

Read More
தவெக தலைவர் விஜய்

நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…

தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும்…

Read More