ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீச்சு : பாதுகாப்பு காரணமாக விரைவு ரயில் நிறுத்தம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது . இதனால் ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரான பின்னர் மட்டுமே ரயில் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

