கோவில் திருப்பணிக்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் வெள்ளாழர் வீதியில் அமைந்துள்ள அக்கா சாலை விநாயகர் கோவில் திருப்பணிக்காக, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நன்கொடை வழங்கினார். LJK பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் தலைமையில், கோவில் நிர்வாகிகள் திருப்பணி தொடர்பான பத்திரிகையை வழங்கியதை தொடர்ந்து, கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பணி பணிகள் சிறப்பாக…

Read More

சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்; சராசரி மக்களின் சிரமங்கள் எனக்கு தெரியும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிரமங்கள் தனக்கு நன்கு தெரியும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், “நாங்கள் பணத்துடன் பிறந்தவர்கள் அல்ல. என் தந்தை ரப்பர் தோட்டத் தொழிலாளி. எங்கள் குடும்பத்தின் தினசரி வாழ்வாதாரம் வெறும் 10 ரூபாய்தான். ஆட்டோவும் பேருந்திலும் பள்ளிக்குச் சென்றவன் நான். படிப்படியாக…

Read More

புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே இலக்கு – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:புதுச்சேரியில் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத்துறையில் ஊழல் உள்ளிட்ட பல குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என அவர் கூறினார்….

Read More

லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் கொடி ஏற்றி தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) அதிகாரப்பூர்வ கொடி இன்று பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைவர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார். நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியில், கையில் வேலுடன் சிங்க முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியில் ஆறு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் சின்னமாக LJK என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது. வலிமை, தைரியம்,…

Read More

மும்மத வழிபாட்டுடன் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரார்த்தனை

புதுச்சேரி:புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்கத்திற்கு முன்பாக, கட்சியின் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மும்மத வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனை செய்தார். பிள்ளையார் சுழி போட்டு அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், அவர் முதலில் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, புதுவை தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்து, அமைதி, மக்கள் நலம் மற்றும் நல்லாட்சிக்காக வேண்டுதல் செய்தார்….

Read More

புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் அரசியல் பயணம்

புதுச்சேரி:புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சியாக லட்சிய ஜனநாயக கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. கட்சியின் கொடி மற்றும் கொள்கை பிரகடனம் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் இந்த புதிய அரசியல் இயக்கம் உதயமாக உள்ளது. மக்கள் நலன், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி நோக்குள்ள அரசியலை மையமாகக் கொண்டு கட்சி செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சிங்கப்பூர் போல மேம்பட்ட நிர்வாகம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார…

Read More

முதன்முறை ஐ.நா சபையில் அறிவிக்கப்பட்ட கட்சி

“நான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்”. இந்தியாவின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் என ஐ.நா மன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திய சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்,  சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் உரையாற்றினார். மனித உரிமைகளின் முக்கியத்துவம், அது உலகளவில் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் மற்றும் கல்வியின் சக்தி குறித்து தனது உரையில் விரிவாக பேசினார். அவ்வுரையின் போது,…

Read More

பேராசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வு வழங்கப்படவில்லை – ஜோஸ் சார்லஸ் மார்டின் அதிருப்தி

பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி அரசு கல்லூரிகளில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும், பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது. இது மாணவர்களுக்கான கல்வியின் தரத்தைப் பாதிக்கும்…

Read More