
இலவச மதுபாட்டில் கேட்டு தகராறு – பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய ரவுடி கும்பல்
புதுச்சேரியில் இலவச மதுபாட்டில்கள் கேட்டு, ஊழியரை மிரட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அரியூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடையில், ரவுடிகள் சிலர் தங்களுக்கு இலவசமாக மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கடை ஊழியர், மதுபானம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரவுடிகள் கடை மீது, பெட்ரோல் குண்டுகளை வீசிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ…