விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு
பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை முன்னிட்டு நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை மாற்றி புதிய தமிழகத்தை அமைக்க வேண்டும் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, ஊழல் அதிகரித்து வரும் திமுக ஆட்சியை மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது. புதியதோர் தமிழகத்தை உருவாக்க தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு…

