புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே இலக்கு – ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:புதுச்சேரியில் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத்துறையில் ஊழல் உள்ளிட்ட பல குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என அவர் கூறினார்….

