9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி வந்த சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்….

Read More

இடியாப்பம் விற்பனைக்கு இனி உரிமம் கட்டாயம்

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி உரிய உரிமம் பெற்ற பின்னரே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. உணவின் தரம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெறலாம் எனவும் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்படும் உரிமம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள்…

Read More