சேலத்தில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்

சேலத்தில் நடைபெறும் த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனையில் கட்சித் தலைவர் விஜய் திறந்த வாகனத்தின் மேல் நின்றபடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை முன்னிட்டு காவல்துறை 51 நிபந்தனைகள் விதித்துள்ளது. மேடை அல்லது இருக்கைகள் அமைக்க அனுமதி இல்லை; அதிகபட்சம் 5,000 பேருக்கு மட்டும் பங்கேற்பு வழங்கப்பட்டுள்ளது.


11 சட்டசபை தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் நேரில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் சூழல் உருவாகி வரும் நிலையில், இக்கூட்டத்தில் விஜய் வெளியிடும் கருத்துகள் குறித்து கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *