மஞ்சள் அட்டை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் – முதல்வர் ரங்கசாமி
மஞ்சள் அட்டை பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும், முதியோர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

