பனிப்புயல் தாக்குதல் – உருக்குலைந்த அமெரிக்கா

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைபோல் குவிந்த பனிக் குவியல்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *