மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையின் மூலம் 300 கடைகளுக்கு மட்டுமே செயல்பாட்டு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அங்கு 1,417 கடைகள் இயங்கி வருவதால், அனைத்தையும் அகற்றிவிட்டு புதிய முறையில் தேர்வு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொம்மை விற்பனை, உணவகங்கள் மற்றும் ஃபேன்சி பொருள் கடைகள் ஆகியவற்றுக்கு தலா 100 என பிரித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

