2036க்குள் நிலவில் அணுமின் நிலையம்: ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவிப்பு
2036ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் Nuclear Power அமைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ‘ரோஸ்கோஸ்மோஸ்’ (Roscosmos) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம், எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான நிலவு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நிலவில் நீண்டகால மனித வாழ்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த அணுமின் நிலையத்தின் மூலம், நிலவின் மேற்பரப்பில் அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் தொடர்ச்சியான விண்வெளி பயணங்கள் மேற்கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, நிலவு ஆராய்ச்சியில் புதிய கட்டத்தை தொடங்குவதாக கருதப்படுவதுடன், உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளில் முக்கியத்துவம் பெறும் திட்டமாக பார்க்கப்படுகிறது.

