இந்தியாவின் கவலைக்கு தாய்லாந்து பதில்
கம்போடியா எல்லையில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம், தாய்லாந்து வீரர்களின் இழப்புகளோடு ஒப்பிடமுடியாது என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்திய நிலையில், அதற்கு பதிலளித்த தாய்லாந்து அரசு, இந்த நடவடிக்கை ஒரு அவமதிப்பாக கருதக் கூடாது என விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கம்போடியா உடனான தங்களின் இருதரப்பு பிரச்சனையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய தலையீடு இதில் அவசியமில்லை என தாய்லாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகாமல் இருக்க, தூதரக வழியில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே தங்களின் நோக்கம் என தாய்லாந்து அரசு வலியுறுத்தியுள்ளது.

