LJK தலைவர் தலைமையில் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! கைது செய்த போலீசார்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது, திமுக MLA பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், MLA பழனியாண்டியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் இருந்து சென்று திமுக அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

திமுக அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற லட்சிய ஜனநாயக கட்சியினரை மகாத்மா காந்தி சாலை – சின்ன வாய்கால் வீதி சந்திப்பில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கைது செய்யப்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் புதுவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பத்திரிக்கையாளரை தாக்கியதை கண்டித்து LJK கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்எல்ஏ சிவசங்கர் தலைமையில் புதுச்சேரி திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். தற்போது ஒதியஞ்சாலை போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் பதட்டம் பரபரப்பு.

தடைகளை மீறி போராட்டம் மற்றும் திமுக அலுவலகத்தை முற்றுகிட சென்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *