இந்தியாவில் களமிறங்கும் ஹைட்ரஜன் ரயில்கள் | ஹைட்ரஜன் ரயில்சிறப்பம்சம் என்ன?
ஹைட்ரஜன் ரயில்கள் (Hydrogen trains) என்பவை டீசல் எஞ்சின்களுக்குப் பதிலாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைப் (Fuel Cells) பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்கும் அதிநவீன ரயில்கள் ஆகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் புகைக்குப் பதிலாக நீராவி மட்டுமே வெளியேறும்.இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் சேவை ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் பிரதமர் நரேந்திர மோடியால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
*நாட்டின் முதல் ஹைட்ரஜன் பசுமை ரயில் சேவை
*ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே 89 கி.மீ. தூரம் ரயில் சேவை
*1,200 கிலோ வாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசையால் ரயில் இயக்கம்
*மணிக்கு 75 கி.மீ.வேகத்தில் 10 பெட்டிகளுடன் சுமார் 2,600 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன்
*ஹைட்ரஜன் கசிவு, வெப்பம், தீ, புகையை முன்கூட்டியே கண்டறியும் பாதுகாப்பு அம்சங்கள்
*கார்பன் வெளியீடு குறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரயில் இயக்க செலவு குறைவு
*அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா

