தங்கம், வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கம்: இன்றைய நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சமீப நாட்களாக கடும் ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகின்றன. ஒருநாள் அதிவேகமாக உயர்வதும், அடுத்த சில நாள்களில் திடீரென சரிவதும் என விலை நிலவரம் முதலீட்டாளர்களையும் நகை வாங்குபவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 மற்றும் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,34,400 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதே நாளில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425-க்கு விற்பனையானது. இதுவும் இதுவரை இல்லாத உயர்வாகப் பதிவானது.

ஆனால், அதன் பின்னர் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வேகமாக சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 மற்றும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,850-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.405-ஆக இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையும் விலை சரிவு தொடர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950 மற்றும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 மற்றும் கிலோவுக்கு ரூ.30 ஆயிரம் குறைந்து, ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மீண்டும் அதிரடி சரிவு பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950 மற்றும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 மற்றும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு, நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு அளவு நிம்மதியை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *