தூத்துக்குடி – விளாத்திகுளம் மாணவி- கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பை வரவேற்ற LJK தலைவர்!
“தூத்துக்குடி – விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கைதான தர்மமுனீஸ்வரனை, குற்றவாளி என உறுதிசெய்து, இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த மார்ச் 10-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்த நிலையில், மிக விரைவாக 76 நாட்களில் இவ்வழக்கை விசாரித்து, நீதி கிடைக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுகள்!” – LJK தலைவரும் புதுவை காமராஜ் நகர் MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான தர்மமுனீஸ்வரனை குற்றவாளி என நீதிமன்றம் உறுதிசெய்து, இரட்டை மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளி தர்மமுனீஸ்வரனை கைது செய்தது.
இதனையடுத்து, வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று, வெறும் 76 நாட்களிலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவிக்காக விரைவில் நீதி கிடைத்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரித்த காவல்துறை அதிகாரிகள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

