காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல்? – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் ஏன் சிரமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து அரசிடம் விளக்கம் கோரியது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *