கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை…
நீட்க்கு பதில் புதிய நுழைவுத் தேர்வு
10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய ‘NEET-Pre Ayush’ நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்வு மூலம் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட AYUSH படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் திறனை மதிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்தவித கட்டணமும் இன்றி தேர்வு நடத்தப்படும் என்றும், 3 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் CEO பதவி விண்ணப்பிக்கலாம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள், 3 ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அயோத்தியில் வசிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு, நிர்வாகம் அல்லது நிதித்துறையில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் இந்தப் பதவியை தீவிரமான கடமையாக ஏற்று செயல்படத் தயாராக இருக்க வேண்டும் என்பதுடன், வைணவ மரபைச் சேர்ந்த ராம பக்தராக இருப்பது முக்கிய தகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.



