தடுப்பூசியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த LJK தலைவர்!
புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் கடந்த 5ஆம் தேதி உயிரிழந்த நிலையில் குழந்தையின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பொதுச்செயலாளர்கள் பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர் முனைவர் கண்ணபிரான், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினிடம் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர் . இந்த நிகழ்வு அருகில் இருந்தவர்களின் இதயத்தை கனமாக்கியது.

