LJK வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேல்முருகனும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேஷும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அந்தக் கட்சியில் இணைந்தனர்.
மேலும், தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட பலரும் LJK கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு நிகழ்வின் போது, LJK கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

