LJKவுக்கு படையெடுக்கும் மகளிர் குழுவினர்.
புதுவை லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், ராஜசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK)யில் இணைந்தனர்.
இவர்கள் அனைவரும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, கட்சியின் கொள்கைகளில் நம்பிக்கை தெரிவித்து, அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

