காமராஜர் நகர் தொகுதியில் பாரம்பரிய வரவேற்பு பெற்ற LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் ஸ்ரீ முத்து விநாயகர் – ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி – ஸ்ரீ நாகமுத்து தேவஸ்தானம் ஆலயம் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்

அவருக்கு பாரம்பரிய முறையில் பரிவட்டம் கட்டி, சாமியின் மாலை அணிவித்து கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக கௌரவம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளை தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து, மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார், பரப்புரை பொதுச் செயலாளர் தாடி பாலாஜி, பொதுச் செயலாளர்கள் சுரேஷ், துரைசாமி பாபு, பிரபாகரன், மாநில செயலாளர் ரவி (ரவி ராஜன் ராம்),தொண்டர் அணி மாநில தலைவர் மதன் சுகுமார், ரவி, சாமிநாதன், கோபி, முருகானந்தம், அஜய், வரதராஜன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *