Puducherry Outlook Conclave கருத்தரங்கில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Democratic Organization for Civic Knowledge சார்பில் “Puducherry Outlook Conclave – Current Realities, Future Vision” என்ற தலைப்பில் முக்கிய கருத்தரங்கு புதுச்சேரி ஆனந்தா இன் ஹோட்டலில் நடைபெற்றது.


புதுச்சேரியின் தற்போதைய சமூக, நிர்வாக மற்றும் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்து, அதன் எதிர்கால வளர்ச்சி பாதையை வடிவமைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதுச்சேரியின் எதிர்கால வளர்ச்சிக்கான முழுமையான திட்ட வரைபடம், நல்லாட்சி, கல்வி மேம்பாடு, சமூக முன்னேற்றம் மற்றும் நிர்வாக திறன் உயர்வு குறித்து விரிவாக பேசினார்.

அவர் கூறியதாவது “மாணவர்களாக இருக்கும் காலத்திலேயே பல கனவுகள் உண்டு. ஆனால் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உருவாகவில்லை. நமக்கு நல்ல தலைவர்கள் தேவை. நம் ஊரையும் ‘சிங்கப்பூர்’ போல மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நல்லாட்சி என்பது மக்களின் மகிழ்ச்சியால் அளவிடப்பட வேண்டும். தரமான கல்வி, சிறந்த மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகள் இனி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.”

புதுச்சேரியில் தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ₹11 முதல் ₹13 வரை வழங்கப்படுவதாகவும், சொந்த மின்உற்பத்தி மூலம் அதை ₹4-க்கு வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் அரசு பட்ஜெட்டில் ₹2000 கோடி வரை சேமிக்க முடியும் என்றும், இதற்கான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

சிங்கப்பூர் நகர கட்டமைப்பில் பங்காற்றிய 188 ஆண்டுகள் அனுபவமுள்ள கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து புதுச்சேரிக்கான நகர மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தேர்தலுக்கு முன் வரைவுத் திட்டம் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.


புதுச்சேரியின் வளர்ச்சி குறித்து நடைபெற்ற இந்த கருத்தரங்கு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *