மக்களுக்குக் நாள்காட்டி வழங்கிய LJK தலைவர் – புதுவையில் நிகழ்ச்சி
புதுவை வில்லியனூர் தொகுதியில், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், நிகிழ்ச்சியில் பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கட்சியின் சமூக நலப்பணிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், வருங்காலத்திலும் இதுபோன்ற மக்கள் நலச் செயல்பாடுகள் தொடரும் என்றும் LJK தலைமை தெரிவித்துள்ளது.
இந்த நாள்காட்டி விநியோக நிகழ்ச்சி, உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

