ரூ. 3.50 லட்சம் மதிப்பு e-ஆட்டோ (e – auto ) வழங்கிய LJK தலைவர்!

லட்சிய ஜனநாயக கட்சியின் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைமை ஆட்டோ ஸ்டாண்டினை காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் ஸ்டாண்ட்டில் LJK நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் திறந்து வைத்தார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் பெயர் பலகையைத் திறந்து வைத்த அவர், அந்த ஆட்டோ ஸ்டான்டின் மூத்த உறுப்பினரும் , பொருளாதார சூழலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவருமான ஆட்டோ ஓட்டுனர் மிக்கேல் நாதனின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருக்கு தனது சொந்த செலவில் ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள புதிய இ ஆட்டோவினை (e – auto) வழங்கினார்.

தொடர்ந்து ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்வில் பேசிய அவர் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை உயர்த்தவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் குறித்து யோசித்து வருவதாகவும், விரைவில் அவை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் LJK பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, பாபு, ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் சுரேஷ், பரப்புரை பொது செயலாளர் நடிகர் தாடி பாலாஜி, தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் ஜெயசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *