லட்சிய ஜனநாயக கட்சிக்கு “தர்பூசணி” சின்னம் – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மகிழ்ச்சி

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, காமராஜ் நகர் தொகுதி உட்பட்ட சுந்திரமூர்த்தி நகர், கவிக்குயில் நகர், முத்துரங்க செட்டியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.


முன்னதாக, அருள்மிகு ஸ்ரீ புத்துக் கருமாரியம்மன் ஆலயம் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், மகளிர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் ஆதரவு தெரிவித்து. “உங்களை வெற்றி பெறச் செய்வோம்” என உறுதி தெரிவித்தனர்.


மேலும், கட்சியின் “தர்பூசணி” சின்னத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில், அப்பகுதி மக்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கியும் அவர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, ஸ்ரீ ராமசாந்தமூர்த்தி ஆஞ்சநேயர் ஆலயம் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் அவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ரிச்சர்ட்டு ஜான் குமார், பொதுச் செயலாளர்கள் சுரேஷ், துரைசாமி, பிரபாகரன், பரப்புரை பொதுச்செயலாளர் தாடி பாலாஜி, தொண்டரணி மாநில தலைவர் மதன் உள்ளிட்டோர் மற்றும் தொகுதி நிர்வாகிகள் சிவா, குணசேகரன், ஆறுமுகம், ‘குமார், பெருமாள், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *