சென்னையில் இன்று மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று மாலை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,
மேலும், காரைக்காலில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை திடீர் மாறுபாடு காரணமாக மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், குறைந்த வெளிச்சம் உள்ள நேரங்களில் அதிக கவனத்துடன் செயல்படவும் வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

