புது வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதிவு செய்துள்ளார். கேப்டனாக அவர் தலைமையில் இந்திய மகளிர் அணி 77 வெற்றிகளை பெற்றுள்ளதன் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கெளர் கைப்பற்றியுள்ளார்.
இதுவரை இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் வைத்திருந்தார். அவர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 76 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தற்போது அந்த சாதனையை ஹர்மன்ப்ரீத் கெளர் முறியடித்து, முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சியையும், ஹர்மன்ப்ரீத் கெளரின் திறமையான தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணமாக கருதப்படுகிறது.

