காமராஜ் நகர் தொகுதியில் LJK தலைவர் நேரில் ஆய்வு
புதுவை காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொகுதி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பொதுமக்கள் தேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது LJK பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, இணை பொருளாளர் அயூப் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

