முதியோர் இல்லத்துக்கு டிவி வழங்கி மனிதநேய உதவி செய்த LJK தலைவர்
புதுவை பாஜக பிரமுகரும், கலை முதியோர் இல்லத்தின் நிர்வாகியான கணேசன் – பாஜகவிலிருந்து விலகி LJK-வில் இணைந்துள்ள நிலையில், அவரது சமூக சேவைகளை பாராட்டும் வகையில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனிதநேய உதவிகளை வழங்கினார்.
அவரது சேவையை பாராட்டி, கலை முதியோர் இல்லத்திற்கு ஒரு டிவியை LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். சமூகப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கணேசனின் சேவைகளை பாராட்டிய ஜோஸ் சார்லஸ் மார்டின், “சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவுவது அனைவரின் கடமையாகும்” என தெரிவித்தார். இந்த உதவி நிகழ்வில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மனிதநேய செயல், சமூக வட்டாரங்களில் பாராட்டை பெற்றுள்ளது.

