மீனவர்களை மீட்க LJK தலைவரிடம் கோரிக்கை
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஆழ்கடலுக்கு இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 28 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மாநில செயலாளர் முருகானந்தம் தலைமையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கைது செய்யப்படுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க பாதம் தொட்டு கோரிக்கை வைத்தனர்.
மேலும் எங்களது ஒரே நம்பிக்கை நீங்கள் மட்டும் தான் என்றும் அவர்கள் கூறினார்கள். சந்திப்பின் போது மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாஷித், காரைக்கால் மாவட்ட மீனவர் அணி தலைவர் வெற்றிவீரன், காரைக்கால் மாவட்ட பரபரப்பை செயலாளர் G.V.பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.
அப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் உதவிகளை செய்து தருவதாகவும் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி அளித்தார்.
மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கை கடற்படையினரால் கடந்து ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உதவியால் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்கள் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

