கிறிஸ்துமஸ் விழா: கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை
டெல்லி:
கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளில், பொதுமக்களுடன் இணைந்து கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் பிரதமர் மோடி பங்கேற்று, மனமுருக இயேசுவை வழிபட்டார்.
இந்த நிகழ்வின் போது, நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் தேவாலய வருகை, மத நல்லிணக்கத்தையும், பன்முக பண்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

