நெல்லித்தோப்பில் LJK மக்கள் மன்ற தொடக்கம்;
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் JCM மக்கள் மன்றத்தை லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி நெல்லித்தோப்பு பெரியார் நகர் மன்ற தலைவர் ஜான் பீட்டர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் லட்சிய ஜனநாயக கட்சியின்
பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி , JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், கட்சியின் இணை பொருளாளர் அயூப் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து வழங்கப்படும் என நிகழ்ச்சியில் உறுதியளிக்கப்பட்டது. இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

