கரும்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராஹி அம்மன்
சாமிப்பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரிகார வாராஹி அம்மன் கரும்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
புதுச்சேரி மாநிலம் சாமிப்பிள்ளை தோட்டத்தில் அருள்மிகு மகாசக்தி பரிகார வாராஹி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விஷேச நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இப்பூஜையில், அம்மனுக்கு வண்ணப்புடவை அணிவிக்கப்பட்டு கரும்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பாராணயம் பாடி தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

