கார் மோதி 4 பெண் பக்தர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண் பக்தர்கள் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கடலூர் மாவட்டம் தொளார் குடிகாடு கிராமத்திலிருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

